பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஜோசப் விஜய்
சென்னை, 25 ஜூலை (ஹி.ச.) பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதி
Cm


சென்னை, 25 ஜூலை (ஹி.ச.)

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, மூத்த அரசியல் தலைவரான மருத்துவர் ச. இராமதாசுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

இந்த வாழ்த்து பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் மருத்துவர் ச. இராமதாசுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ