மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்!!
புதுடெல்லி, 25 ஜூலை (ஹி.ச.) நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் 35 நாட்களாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் மத்திய அரசு அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்
தர்மேந்திர பிரதான்


புதுடெல்லி, 25 ஜூலை (ஹி.ச.)

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் 35 நாட்களாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.

அவர்களுடன் மத்திய அரசு அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டக்காரர்களுக்கு பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார்.

மேலும், பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜினாமா கடிதத்தை அவர் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நமது இளைஞர்களின் லட்சியங்கள், கனவுகளை நான் மிகவும் மதிக்கிறேன். இளைஞர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் மட்டுமல்ல, ஒரு புதிய மற்றும் வளர்ச்சி பெற்ற இந்தியாவின் சிற்பிகள் ஆவர்.

கடந்த 10 நாட்களில் நடந்த நிகழ்வுகளால் நான் ஆழ்ந்த வருத்தமடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் இளைஞர்கள் குழப்பமடைந்து தீய சுழலில் சிக்கிக்கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன், இதுவே எனது உறுதி என்ற அவர், ஜந்தர் மந்தரிலும் நாட்டிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P