தொலைதூர மற்றும் இணையவழி எம்.பி.ஏ. படிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு
சென்னை, 25 ஜூலை (ஹி.ச.) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையம் வழங்கி வரும் முதுநிலை மேலாண்மையியல் படிப்பான எம்.பி.ஏ. படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. உயர்கல்வியை தொலைதூரத்
Distance and Online MBA Programs


சென்னை, 25 ஜூலை (ஹி.ச.)

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையம் வழங்கி வரும் முதுநிலை மேலாண்மையியல் படிப்பான எம்.பி.ஏ. படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. உயர்கல்வியை தொலைதூரத்தில் இருந்தபடியே தரமான முறையில் பெற விரும்பும் மாணவர்களுக்காக இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பில் இருப்பவர்கள், குடும்பச் சூழல் காரணமாக முழுநேரக் கல்லூரிக்குச் செல்ல முடியாதவர்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் உயர்கல்வியை தொடர முடியாமல் இருப்பவர்களுக்கு இந்த தொலைதூர எம்.பி.ஏ. திட்டம் ஒரு சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. இணையவழி மூலம் பாடங்கள், தேர்வு முறைகள் என நவீன தொழில்நுட்பத்துடன் இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் எங்கிருந்தபடியும் எளிதாக கற்க முடியும்.

மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான டான்செட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தகுதி நிர்ணயிக்கப்பட்டு சேர்க்கை நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

டான்செட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த எம்.பி.ஏ. படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ள மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்கலாம்.

Hindusthan Samachar / vidya.b