Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 25 ஜூலை (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் விஐய பாலாஜி துவக்கி வைத்து பணி ஆணையை வழங்கினர்.
கோபிசெட்டிபாளையம் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் துவங்கி நடைபெற்று வருகிறது.
இவ்வேலைவாய்ப்பு முகாமினை வருவாய் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் துணி நூல், கைத்தறித்துறை அமைச்சர் விஜய பாலாஜி துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, முகாமில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நேர்காணல் அரங்குகள் மற்றும் வழிகாட்டுதல் மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சுமார் 10,000-க்கு மேற்பட்ட நபர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கு பெற்றுள்ள நிலையில்,தமிழ்நாட்டில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று நேரிடையாக நேர்காணல் நடத்தி பணி நியமன ஆணை வழங்க உள்ளது.
8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு ஐ.டி.ஐ டிப்ளமோ, நர்சிங், பார்மசி, மற்றும் பொறியியல் முடித்த அனைவருக்கும் ஏற்ற வகையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
முகாமிற்கு வருபவர்களின் வசதிக்காக கோபிசெட்டிபாளையம், அந்தியூர், நம்பியூர், குன்னத்தூர், கவந்ததுப்பாடி, சத்தியமங்கலம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து முகாம் நடைபெறும் இடத்திற்கு இலவச சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
இன்று காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் ஈரோடு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நிறுவனங்களின் நேர்காணல் முடிந்த நிலையில் அவர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் விஜய பாலாஜி கலந்து கொண்டு 300 நபர்களுக்கு தனியார் நிறுவனத்தின் பணி ஆணையை வழங்கினர்.
Hindusthan Samachar / ANANDHAN