தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
ராமேஸ்வரம் , 25 ஜூலை (ஹி.ச.) கடந்த 22-ம் தேதி ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 9 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்
தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்


ராமேஸ்வரம் , 25 ஜூலை (ஹி.ச.)

கடந்த 22-ம் தேதி ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 9 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஆஜர்படுத்திய மீனவர்களை வரும் 6-ம் தேதி வரை சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் மீனவர்கள் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மீனவர்களையும் படகுகளையும் உடனே விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 10000-க்கும் மேற்பட்டவர்கள் வேலையிழந்துள்ளன.

புதிய அரசு மீனவர்கள் பிரச்சனை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லாத சூழலே நிலவுகிறது.

அது மட்டுமின்றி மீனவர் சங்கத்தினர் முதலமைச்சருன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.

இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b