Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 25 ஜூலை (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்எம் நகரை சேர்ந்தவர் நம்பி (75) இவர் ஓசூர் ஜூஜூவாடியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார் இவர் தனது நிறுவனத்திற்கு வரவேண்டிய 10 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி தொகையை திரும்ப பெற வதற்கு ஓசூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.
அதனை விசாரித்த வடக்கு ஓசூர் மாநில வரி அலுவலராக பணியாற்றும் கலையரசன் (48) என்பவர் நம்பியிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம் கொடுக்க விரும்பாத நம்பி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார்.
லஞ்ச போலீசார் அறிவுறுத்தலின் பேரில் நம்பி இன்று இரசாயணம் தடவிய ஒரு லஞ்சம் ரூபாயை அதிகாரி கலையரசனிடம் வழங்கிய போது மறைந்து இருந்த கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அதிகாரி கலையரசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர் இது சம்பந்தமாக தொடர்ந்து அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN