Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 25 ஜூலை (ஹி.ச.)
கோவை தொட்டிப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளியில், 2-வது சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் மாவட்ட அளவிலான கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
ராதா பாலாமணி நினைவு கோப்பைக்காக இரு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் என ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டுவதாகவும்,இது போன்ற போட்டிகள் நடத்துவதால், மாவட்ட அளவில் சிறந்த வீரர், வீராங்கனைகளை அடையாளம் காண இயலும் என பள்ளியின் தாளாளர் பிரதேவ் ஆதிவேல் தெரிவித்தார்.
முன்னதாக போம்டிகளுக்கான துவக்க விழாவில்,பள்ளியின் தாளாளர் ஆதி ஜனனி,மற்றும் திருப்பூர் மாவட்ட கோ கோ விளையாட்டு சங்க செயலாளர் கெம்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ராதா பாலாமணி நினைவு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடதக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam