Enter your Email Address to subscribe to our newsletters

கோவை , 25 ஜூலை (ஹி.ச.)
கோவை ஸ்டேன்ஸ் மேல்நிலைப்பள்ளியின் ICSE/ISC பிரிவுக்கான 2026–2027 கல்வியாண்டு ஆண்டு பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள், பள்ளி வளாகத்தில் உள்ள ராஜேந்திரன் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சாந்தி ஆஷ்ரம் தலைவரும், சர்வதேச குழந்தைகள் மற்றும் பொது சுகாதார மையத்தின் நிறுவனருமான டாக்டர் கெசெவினோ ஆரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சி, பள்ளியின் துணை தலைமை மாணவர் ஆரோன் யோஹான் ஜோசப் தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனை மற்றும் பைபிள் வாசிப்புடன் தொடங்கியது. பள்ளி முதல்வர் ஜெனட் ஜெயப்பிரகாஷ் வரவேற்புரை வழங்கி, பள்ளியின் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
சிறப்புரையில் பேசிய டாக்டர் கெசெவினோ ஆரம், மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் சமூக அக்கறை, மனிதநேயம் மற்றும் நற்பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின்னர் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் வழங்கிய ‘Try a Little Kindness’, ‘Football Fiesta’, ‘Cartoon Carnival of Hamelin’, ‘Echoes of Sesame’ உள்ளிட்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.
விழாவில் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பாளர் பிலிப் ஜே. ஃபவுலர், கௌரவப் பொருளாளர் டாக்டர் ஜேம்ஸ் ஞானதாஸ், நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் சுசீதா ராமச்சந்திரன், தலைமை நிர்வாக அதிகாரி வி. எம். ஜான், ஆங்கிலோ-இந்தியன் பிரிவு முதல்வர் பி. ஏ. ஜான் ஸ்டீபன், ஸ்டேன்ஸ் CBSE முதல்வர் ஐலின் ஜெத்ரோ, ஸ்டேன்ஸ் இன்டர்நேஷனல் முதல்வர் ஜார்ஜினா சிம்மன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி தலைமை மாணவர் நோயல் வின்சென்ட் கூடின்கோ மற்றும் தலைமை மாணவி அவந்திகா பி. ஆகியோர் நன்றியுரை வழங்கினர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA