மாணவர்கள் எழுப்பிய குரலை யாராலும் அடக்க முடியவில்லை – தர்மேந்திர பிரதான் ராஜினாமாவுக்கு நாஞ்சில் சம்பத் கருத்து
சென்னை, 25 ஜூலை (ஹி.ச.) மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான நாஞ்சில் சம்பத் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும்
Nanjil


J


சென்னை, 25 ஜூலை (ஹி.ச.)

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான நாஞ்சில் சம்பத் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் கவனம் ஈர்த்துள்ளது.

அவர் தனது பதிவில்,

NEET என்கிற வல்லரக்கனை நியாயப்படுத்தியவர், வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்காதவர், மாணவர்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, சரித்திரம் சுழலும் போதும், சமுத்திரம் குமுறும் போதும், அதை மறிக்க முடியாது என்பதை மாணவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

மாணவர்களின் தோள்களுக்கு எனது முத்தங்கள் என பதிவிட்டு, மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு தனது பாராட்டையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.

நாஞ்சில் சம்பத்தின் இந்த பதிவு, நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர் போராட்டங்களையும், வினாத்தாள் கசிவு விவகாரத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகளையும் மீண்டும் பேசுபொருளாக மாற்றியுள்ளது. குறிப்பாக, மாணவர்களின் தொடர் போராட்டமும், எதிர்ப்புக் குரலும் இறுதியில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தனது கருத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் நிலையில், நீட் தேர்வு, கல்விக் கொள்கை மற்றும் மாணவர் போராட்டங்கள் தொடர்பான விவாதங்களும் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

Hindusthan Samachar / P YUVARAJ