Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 25 ஜூலை (ஹி.ச.)
மதுரை (25.7.26)திருப்பரங்குன்றம்
மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் செய்தியாளர்கள் அறையை தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏத்தி திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் தொடர்ந்து அவர் பேசும்போது:
தாலுக்கா நொறுபவர்களுக்கு அரசு அங்கீகரா அட்டை வழங்குவது குறித்த கேள்விக்கு:
15 வருடங்களாக பத்திரிக்கையாளர்களுக்கு தேவையான சலுகைகள் சரியாக செல்லவில்லை அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு இது சம்பந்தமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர் சங்கங்கள் வாயிலாக அவர்களுக்கு தேவைகளை சரி செய்ய மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறும் மாணவர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு:
மாணவர்கள் போராட்டத்தில் நமது நிலைப்பாடு ஏற்கனவே சொன்னது போல் டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தோம்.
அற வழியில் நடைபெற்ற போராட்டத்திற்கு காவல்துறை நடத்திய தாக்குதல் கடும் கண்டனம் தெரிவித்தோம்.
நம்முடைய நிலைப்பாடு நீட்டு வேண்டாம் தேவையற்றது, அது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அதிக சுமையை தரும் அதனால் எந்த பயனும் இல்லை, நீட் வேண்டாம் என்பது தான் நமது நிலைப்பாடு.
போராட்டத்தில் நிறைய கோரிக்கைகள் உள்ளது டெல்லியில் நீட் தேர்வை சீரமைக்க வேண்டும்.
நம்முடைய நிலைப்பாடு நீட்டு வேண்டாம் தமிழகத்தில் அறவழியில் நடக்கும் போராட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் அனுமதியும் முழு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு சிலர் நீட் தேர்வை மறுசீரமைப்பு செய்யவும் ஒரு சிலர் நீட் தேர்வை விளக்க வேண்டியும் போராடுகிறார்கள்.
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது நம்முடைய நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல நம்முடைய கோரிக்கை நீட்டு வேண்டாம்.
அவர் பதவி விலகினாலும் நீட் தொடரும். நீட் க்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் திமுக தலைவர்கள் பங்கேற்று நிறைய பேசி உள்ளார்கள்,இதை பேசும் தகுதி திமுகவுக்கு கிடையாது.
அவர்கள் தான் இதை ஐந்து வருடத்தில் மோசமான சூழ்நிலைக்கு கொண்டு சென்றார்கள் திமுக ஆட்சிக்கு வரும்போது நீட் தேர்வை நிறுத்துவோம் என்று சொன்னார்கள் தவறான நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்து.
இப்போது இறங்கி மேடையில் பேசுகிறார்கள் நீட் தேர்வை பற்றி பேசும் தகுதி திமுகவினருக்கு கிடையாது.
நீட் தேர்வு வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளோம் நேரமும் காலமும் வரும்போது அதற்கான முதல் குரலாக நம்மளுடைய குரல் இருக்கும்.
மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவிற்கு முதல்வர் சொல்லக்கூடாது அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டுமென அன்புமணி கூறியது குறித்த கேள்விக்கு:
இந்த விவகாரத்தில் கடந்த ஒரு மாதமாக முதல்வர் பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
என்ன செய்ய வேண்டுமோ அதை ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் திமுக வெறும் கடிதம் மட்டும் எழுதிவிட்டு பின்னாடி துரோகம் செய்தது போல் விஷயங்கள் இருக்காது.
விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும் அதேசமயம் நம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முதல்வர் வலிமையாக எடுப்பார்.
நம்மளை தவிர வேற யாரும் எடுக்கவும் முடியாது
விவசாயிகளுக்கு காப்பீடு வழங்குவது குறித்த கேள்விக்கு:
விவசாயிகளுக்குகடந்த 15 வருடங்களாக மிகவும் மோசமாக உள்ளது காப்பீடுகளுக்காக விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.
2006க்கு பிறகு காப்பீடுகள் சரியாக விவசாயிகளுக்கு போய் சேரவில்லை. அதனை சீரமைக்கும் வேலை நடைபெற்று வருகிறது.
எவ்வளவு விவசாயிகள் காப்பீடு பெற்றுள்ளார்கள் என்ற விவரம் சரியாக இல்லை அதை சீரமைக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு என்ன தேவையோ அது முதல்வர் வாயிலாக கிடைக்கும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு குறித்த கேள்விக்கு:
மதுரை எய்ம்ஸ் சம்பந்தமாக தமிழக அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் அதை துவக்க வேண்டும் அதேபோல் மதுரை மருத்துவக் கல்லூரி மதுரை அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யும் பணியும் துவக்கி உள்ளோம்.
ஜனநாயகம் திரைப்படத்தை பார்த்துவிட்டு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணீர் விடும் காட்சிகள் பரவுவதும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்த கேள்விக்கு:
எங்கள் தலைவருடைய மூன்று வருடம் பயணத்தை பார்க்கிறோம் எங்க மனதில் ஓடினது அவருடைய கடுமையான பயணம் போராட்டம் எவ்வளவு பிரச்சனைகள் சந்தித்தார்.
அது அத்தனையும் தாண்டி இந்த படம் மிகப்பெரிய அளவில் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை நிப்பாட்ட நினைத்த அனைத்து தீய சக்திகளுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் முதல்வரான பிறகு அதைப் பார்க்கும் ஒரு வாய்ப்பு அதை பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது.
ரசிகர்கள் கட்சிக்காரர்கள் படத்தை பார்க்கும் போது முதல்வருடைய மூன்று வருட போராட்டம் அதுதான் மனதில் வந்தது அதனால் இதனை சாதாரண படமாக பார்க்கவில்லை.
விருதுநகரில் ஜனநாயகம் திரைப்படம் திரையிடும்போது விஜயபிரபாகரன் தோல்வி குறித்து வீடியோ திரையிடப்பட்டதாக வரும் சர்ச்சை கொடுத்த கேள்விக்கு:
அது குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம் யாரையும் சொல்லும் நோக்கத்திற்காக செய்யவில்லை அங்கிருக்கும் நிர்வாகிகள் யாரோ தவறாக செய்திருப்பார்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு இதில் பெரிய உடன்பாடு இல்லை நிர்வாகிகள் தெரியாமல் போட்டு இருப்பார்கள் எம்எல்ஏக்கும் அதுக்கும் தொடர்பில்லை அது தெரிவிக்கவும் பட்டுள்ளது என்றார்.
Hindusthan Samachar / GOKILA arumugam