Enter your Email Address to subscribe to our newsletters

ஜெய்ப்பூர் , 25 ஜூலை (ஹி.ச.)
டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டம் நீதிக்கான கோரிக்கை என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பதில் மிகவும் தாமதமாக வந்துள்ளது என்றும் 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025' பட்டம் வென்ற மணிகா விஸ்வகர்மா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026' அழகிப் போட்டியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், போட்டி நிர்வாகக் குழு இயக்குநர் நிகில் ஆனந்துடன் இணைந்து போட்டியாளர்களை சந்தித்து மணிகா விஸ்வகர்மா வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே அரசியல் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவம் லட்சக்கணக்கான மாணவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் கடுமையாக பாதித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டம் நீதிக்கான கோரிக்கையாகும்.
அவர்களின் குரலுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது தனது கருத்தை தெரிவித்திருந்தாலும், அந்தப் பதில் மிகவும் தாமதமாக வந்துள்ளது.
ஆரம்பத்திலேயே மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கவலைகளை கேட்டறிந்து தீர்வு காண அரசு முன்வந்திருக்க வேண்டும் என்றார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA