Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 25 ஜூலை (ஹி.ச.)
NEET தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எழுந்த சர்ச்சையின் காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த மாணவர் அமைப்புகள், அமைச்சரின் ராஜினாமாவை தங்களது போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகக் கொண்டாடியுள்ளன.
குறிப்பாக காக்ரோச் ஜனதா கட்சி (CJP), இது மாணவர்களின் அமைதியான போராட்டத்தின் பலன் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து CJP நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறுகையில்,
மகாத்மா காந்தியின் வழியில் நடத்தப்பட்ட அமைதியான போராட்டத்தின் மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வெற்றி நாடு முழுவதும் போராடிய மாணவர்களுக்கானது என்றும் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானதும், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மெழுகுவர்த்தி பேரணி நடத்தவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
எனினும், தங்களது மற்ற கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கல்வி முறையில் முழுமையான சீர்திருத்தம், தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது மாணவர்களின் வெற்றி; ஜனநாயக முறையிலான போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்று CJP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA