Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 25 ஜூலை (ஹி.ச.)
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் இந்திய வீரர் ஜண்டு குமார் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை அவர் பெற்றுத்தந்துள்ளார்.
ஜண்டு குமாரின் இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில்,
ஆண்களுக்கான ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்த ஜண்டு குமாரின் செயல்பாடு அபாரமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜண்டு குமாரின் சாதனை அளவற்ற வலிமை, தளராத உறுதி மற்றும் பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஒழுக்கமான முயற்சியின் பிரதிபலிப்பாகும் என்றும், ஒவ்வொரு சவாலையும் வென்று அவர் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA