புதுச்சேரி கடற்கரை சாலை மீண்டும் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி
புதுச்சேரி, 25 ஜூலை (ஹி.ச.) நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் புதுச்சேரியில் பல்வேறு தரப்பினர் நடத்திய முற்றுகை மற்றும் வகுப்பறை புறக்கணிப்புப் போராட்டங்களால் பெரும் பரபரப்பு ஏ
புதுச்சேரி கடற்கரை சாலை மீண்டும் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி


புதுச்சேரி, 25 ஜூலை (ஹி.ச.)

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் புதுச்சேரியில் பல்வேறு தரப்பினர் நடத்திய முற்றுகை மற்றும் வகுப்பறை புறக்கணிப்புப் போராட்டங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் புதுச்சேரி காந்தி சிலை அருகே போராட்டம் நடைபெறலாம் என உளவுத்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை கடற்கரை சாலையில் போலீசார் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்திருந்தனர்.

இதனால் மாலை நேரத்தில் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில் நிலைமை சீரானதை அடுத்து இன்று காலை முதல் கடற்கரை சாலையில் போக்குவரத்து வழக்கம் போல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தடுப்புகள் அகற்றப்பட்டு, மக்கள் நடமாட்டத்திற்கும் வாகன போக்குவரத்திற்கும் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

கடற்கரை சாலை திறக்கப்பட்டதால் பொதுமக்களும், நடைபயிற்சி செல்வோரும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b