முட்டை விலை கடும் சரிவு - விற்பனை மந்தம் காரணமாக விலை குறைப்பு
நாமக்கல், 25 ஜூலை (ஹி.ச.) நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடுமையாக சரிந்துள்ளது. இந்தியாவின் முட்டை உற்பத்தி தலைநகரமாக விளங்கும் நாமக்கல் பண்ணைகளில் இன்று முட்டை ஒன்றின் கொள்முதல் விலை ரூபாய் ஆறு புள்ளி ஐம்பதுக்கு நிர்ணயிக்கப்பட்டு
முட்டை விலை கடும் சரிவு - விற்பனை மந்தம் காரணமாக விலை குறைப்பு


நாமக்கல், 25 ஜூலை (ஹி.ச.)

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடுமையாக சரிந்துள்ளது. இந்தியாவின் முட்டை உற்பத்தி தலைநகரமாக விளங்கும் நாமக்கல் பண்ணைகளில் இன்று முட்டை ஒன்றின் கொள்முதல் விலை ரூபாய் ஆறு புள்ளி ஐம்பதுக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயித்துள்ள விலைப்படி, சென்னையில் முட்டை ஒன்றின் சில்லறை விற்பனை விலை ரூபாய் ஏழு புள்ளி முப்பதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கறிக்கோழி விலையும் சரிவைக் கண்டுள்ளது.

உயிருடன் கூடிய கறிக்கோழி ஒரு கிலோ ரூபாய் 134-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ஆடி மாதம் தொடங்கியுள்ளதால் சுப நிகழ்ச்சிகள் குறைந்து முட்டை மற்றும் கறிக்கோழி நுகர்வு வெகுவாக குறைந்துள்ளது.

மேலும் கேரளாவில் ஓணம் பண்டிகை காலத்தை முன்னிட்டு அங்கு அசைவ உணவு தவிர்க்கப்படுவதால், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் முட்டை ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த காரணங்களால் முட்டை தேக்கம் அதிகரித்து விற்பனை சரிந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b