Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூலை (ஹி.ச.)
சென்னை எண்ணூர் கடற்கரையானது வட சென்னையில் அமைந்துள்ள அமைதியான மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு கடலோரப் பகுதியாகும்.
மெரினா அல்லது எலியட்ஸ் கடற்கரை போலல்லாமல், இது பெருமளவு வணிகமயமாக்கப்படாத ஒரு தனித்துவமான கடற்கரையாக விளங்குகிறது.
இந்த நிலையில் எண்ணூர் கடற்கரை பகுதிக்கு தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 5 பேர், இன்று சென்றனர்.
அவர்கள் கடலில் குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை எழுந்தது. இந்த ராட்சத அலையில் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் சிக்கினர்.
அலை அவர்களை கடலுக்குள் அடித்துச் சென்ற நிலையில், அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் நண்பர்கள் 2 மாணவிகளை மீட்டனர்.
அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பாண்டிச்சேரியை சேர்ந்த கிருத்திகா (18 வயது) என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் ஆவடியைச் சேர்ந்த ஆகாஷ் (20 வயது) என்ற மாணவர் மாயமான நிலையில், அவரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடல் அலையில் சிக்கி மாணவி உயிரிழந்த நிலையில், மாணவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b