சுங்கச்சாவடி உள்ளூர் மாதாந்திர பாஸ் கட்டணம் மீண்டும் ரூ.10 உயர்வு - வாகன ஓட்டிகள் அதிருப்தி
சென்னை, 25 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர பாஸ் கட்டணம் மீண்டும் ரூபாய் 10 உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவுக்கு
சுங்கச்சாவடி உள்ளூர் மாதாந்திர பாஸ் கட்டணம் மீண்டும் ரூ.10 உயர்வு -  வாகன ஓட்டிகள் அதிருப்தி


சென்னை, 25 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர பாஸ் கட்டணம் மீண்டும் ரூபாய் 10 உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கும் உள்ளூர் மக்களின் வாகனங்களுக்கு சலுகை கட்டணத்தில் மாதாந்திர பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பாஸ் கட்டணம் கடந்த நான்கு மாதங்களுக்குள் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூபாய் 10 உயர்த்தப்பட்ட நிலையில், மே மாதத்திலும் மீண்டும் ரூபாய் 10 உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் ஒருமுறை ரூபாய் 10 உயர்த்தப்பட்டிருப்பதால் உள்ளூர் வாகன உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்தத் தொடர் உயர்வால், ஆரம்பத்தில் ரூ.330 ஆக இருந்த மாதாந்திர பாஸ் கட்டணம், தற்போது ரூ.360 ஆக அதிகரித்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கும் உள்ளூர் மக்களின் சொந்த வாகனங்களுக்கு மட்டுமே இந்த மாதாந்திர பாஸ் வழங்கப்படுகிறது.

தொடர்ச்சியான இந்த கட்டண உயர்வு தங்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Hindusthan Samachar / vidya.b