Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 25 ஜூலை (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் சிறுத்தொண்ட நல்லூர் அருகே உள்ள மணலூர் பகுதியை சேர்ந்த கார்த்தீசன் என்ற 65 வயது முதியவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சைக்கிளில் ஏரல் வந்த போது தூத்துக்குடியில் இருந்து ஏரல் வழியாக திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு காலில்
முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் 108
ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவித்தனர். அரை மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் ட்ரை சைக்கிளில் அவரை ஏற்றி அருகிலுள்ள ஏரல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
விபத்து ஏற்பட்டு சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக வந்த ஆம்புலன்ஸில் கார்த்தீசனை
மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
தாலுகா தலைநகராகவும் பெரிய வணிக நகரமாகவும் விளங்கும் ஏரலில் போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam