தேனி கொலைச் சம்பவம்,பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
தமிழ்நாடு, 25 ஜூலை (ஹி.ச.) தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியில் 60 வயது பெண் ஒருவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வ
வானதி


தமிழ்நாடு, 25 ஜூலை (ஹி.ச.)

தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியில் 60 வயது பெண் ஒருவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

தனியாக வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஏற்கனவே கவலைகள் இருந்ததாகவும், தற்போது தவெக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் மேலும் அதிகரித்து, தனியாக வசிக்கும் முதியவர்களைக் கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்கள் சிறப்பான ஆட்சியை எதிர்பார்த்த நிலையில், குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக விமர்சித்துள்ள அவர், பெண்களின் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட சிங்கப் பெண் படை முழுமையாக செயல்படவில்லை என்றும், கணக்குக்காக மட்டுமே சில வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, சிங்கப் பெண் படையை முழுவீச்சில் களமிறக்கி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர நடவடிக்கைகள் எடுத்து, குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P