Enter your Email Address to subscribe to our newsletters

லண்டன் , 25 ஜூலை (ஹி.ச.)
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இங்கிலாந்து–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 18 முதல் 22-ந் தேதி வரை நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது.
2-வது டெஸ்ட் ஜூன் 30 முதல் ஜூலை 4-ந் தேதி வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்திலும், 3-வது டெஸ்ட் ஜூலை 8 முதல் 12-ந் தேதி வரை பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்திலும் நடைபெற உள்ளது.
தொடர்ந்து, 4-வது டெஸ்ட் ஜூலை 21 முதல் 25-ந் தேதி வரை சவுத்தாம்ப்டனிலும், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2-ந் தேதி வரை லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்திலும் நடைபெறுகிறது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA