மது போதை தகராறில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை - போலீசார் தீவிர விசாரணை
நாமக்கல், 25 ஜூலை (ஹி.ச) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கீரனூரைச் சேர்ந்த விக்ரம் என்ற இளைஞர் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த சில நபர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறிய
மது போதை தகராறில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை - போலீசார் தீவிர விசாரணை


நாமக்கல், 25 ஜூலை (ஹி.ச)

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கீரனூரைச் சேர்ந்த விக்ரம் என்ற இளைஞர் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த சில நபர்களுடன் மது அருந்தியுள்ளார்.

அப்போது அவர்களுக்கு இடையே மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியதாக கூறப்படுகிறது.

தகராறு முற்றிய நிலையில், உடனிருந்த நபர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்ரமை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த விக்ரம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் ராசிபுரம் காவல் நிலைய போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். விக்ரமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b