திருபுவனம் அருகே அரசு பேருந்து சரக்கு வேன் நேருக்கு நேர் மோதி விபத்து- ஒருவர் பலி
தஞ்சாவூர், 25 ஜூலை (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் வழியாக இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், எதிரே வந்த சரக்கு வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த பயங்கர மோதலில் சரக்கு வேன் முன்பகுதி முற்றிலும் நொறு
collision between a government bus and a goods van


தஞ்சாவூர், 25 ஜூலை (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் வழியாக இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், எதிரே வந்த சரக்கு வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த பயங்கர மோதலில் சரக்கு வேன் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் பேருந்தில் பயணித்த சில பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருபுவனம் காவல்துறையினர் போக்குவரத்தைச் சீர்செய்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையின்படி, அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததே இந்த நேருக்கு நேர் விபத்திற்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b