Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 25 ஜூலை (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும்.
கடற்கரையின் மிக அருகில் அமைந்துள்ள இக்கோயில் ஆன்மீக ரீதியாகவும், கட்டிடக்கலை ரீதியாகவும் உலகளவில் புகழ்பெற்றது.
மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கடந்த 2022-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ஹெச்.சி.எல் (HCL) நிறுவனம் இணைந்து ரூ. 300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகளைத் தொடங்கின.
இப்பணிகளை அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், தற்போது வரை சுமார் 90 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இப்பெருந்திட்ட வளாகப் பணிகளின் ஒரு பகுதியாக, கோயிலின் வடக்குப் பகுதி, சந்நிதித் தெரு வழி மற்றும் நாழிக்கிணறு செல்லும் பாதைகளில் எழில்மிகு வண்ணமயமான நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, கோயில் முகப்பிலும் புதிய நுழைவாயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவாயிலின் புதிய முகப்புத் தோற்றம் மற்றும் கலைநயத்தை ஆன்மீக அன்பர்களும் பக்தர்களும் பெரிதும் ரசித்துப் பாராட்டி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b