Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 26 ஜூலை (ஹி.ச)
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடந்த 24 அம தேதி சாலை விதிகளை மீறி 17 வயது சிறுவன் ஒருவர் ஆட்டோ ஒன்றை ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஜீவிதா எனும் 8 வயது சிறுமி மீது வேகமாக மோதியது.
கரும்புளியூத்து கிராமத்தைச் சேர்ந்த பீட்டரின் மகள் ஜீவிதா மாறாந்தையில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இதில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் பள்ளி முடிந்து கடைக்குச் சென்றுவிட்டு, நெல்லை - ஆலங்குளம் சாலையைக் கடக்க முயன்றபோது வேகமாக வந்த சுமை ஆட்டோ சிறுமி மீது மோதியது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த சிறுமி ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளியான 17 வயது சிறுவனையும், உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவனிடம் ஆட்டோவை ஓட்டக் கொடுத்த ஆட்டோ உரிமையாளரையும் தற்போது கைது செய்தனர்.
18 வயதுக்கு குறைவானவர்களிடம் வாகனங்களை கொடுப்பது கடும் குற்றம் என்றும், இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க பெற்றோர்களும், வாகன உரிமையாளர்களும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b