கார்கில் வெற்றி தினம் - சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் அஞ்சலி
அமராவதி , 26 ஜூலை (ஹி.ச.) கார்கில் விஜய் திவஸையொட்டி (கார்கில் வெற்றி தினம்), கார்கில் போரில் நாட்டின் பாதுகாப்புக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் அஞ
A


அமராவதி , 26 ஜூலை (ஹி.ச.)

கார்கில் விஜய் திவஸையொட்டி

(கார்கில் வெற்றி தினம்), கார்கில் போரில் நாட்டின் பாதுகாப்புக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

நாட்டின் இறையாண்மையை காக்க தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த ராணுவ வீரர்களின் துணிச்சல், தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து இரு தலைவர்களும் சமூக வலைதளமான

‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள பதிவில்,

நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு எனது மரியாதை கலந்த அஞ்சலியை செலுத்துகிறேன்.

கடினமான மலைப்பகுதிகளிலும், எதிர்மறையான சூழ்நிலைகளிலும் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் நாட்டின் இறையாண்மையை அவர்கள் பாதுகாத்தனர்.

அவர்களின் தியாகமும், வீரமும் தலைமுறைகள் கடந்தும் அனைவருக்கும் ஊக்கமாக இருக்கும்.

இது இந்திய தேசபக்திக்கும், தேசிய பெருமைக்கும் நிரந்தர அடையாளமாக திகழும் என்று தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் பவன் கல்யாண் தனது பதிவில்,

அசாதாரண வீரத்துடனும், தன்னலமற்ற தியாகத்துடனும் தேசியக் கொடியின் பெருமையையும், நாட்டின் இறையாண்மையையும் காத்த வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு எனது பணிவான அஞ்சலி.

கார்கில் வெற்றி என்பது ஒரு போர் வெற்றி மட்டுமல்ல; அது இந்தியாவின் அசைக்க முடியாத துணிச்சலுக்கும், உறுதியான மனநிலைக்கும் சான்றாகும்.

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மீட்டனர்.

அவர்களின் தியாகத்தின் அடிப்படையில்தான் நாம் இன்று அமைதியாக வாழ்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்கில் வீரர்களின் தியாகமும், வீரமும் இந்திய மக்களுக்கு என்றும் பெருமையையும் ஊக்கத்தையும் அளிக்கும் என்று தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA