Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜூலை (ஹி.ச.)
மத்திய கல்வித் துறையைக் கண்டித்தும், நீட்வினாத்தாள் கசிவு முறைகேடுகளை எதிர்த்தும் டெல்லி முதல் தமிழ்நாடு வரை நீட் எதிர்ப்புப் போராட்டம் தற்போது மிகத் தீவிரமடைந்துள்ளது.
தொடர் மாணவர் போராட்டங்களின் விளைவாக, நேற்று (ஜூலை 25) மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகமான பாலன் இல்லத்தில் மாணவர் அமைப்பினர் நடத்தி வரும் தொடர் உள்ளிருப்புப் போராட்டம் இன்று (ஜூலை 26) 7-வது நாளாக நீடிக்கிறது.
இதனை தொடர்ந்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் இன்று (26.07.2026) நடைபெற்றது.
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தடுப்புகளை போட்டு மறித்த காவல்துறையினருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆகையால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ஆளுநர் மாளிகை முன்பு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b