கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டம் - மத்திய அரசை விமர்சித்த மாணிக்கம் தாகூர்
சென்னை, 26 ஜூலை (ஹி.ச.) கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காதது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், கோவை
மாணிக்கம்


சென்னை, 26 ஜூலை (ஹி.ச.)

கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காதது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு ஆண்டுதோறும் ஒரே காரணங்களைக் கூறி நிராகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என்ற காரணத்தால் திட்டம் நிராகரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஆக்ரா, போபால், பாட்னா, இந்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்கள் வழங்கப்பட்ட நிலையில், கோவை மற்றும் மதுரை போன்ற தென்னகத்தின் முக்கிய தொழில் மற்றும் சுற்றுலா நகரங்களுக்கு மட்டும் BRTS திட்டம் பரிந்துரைக்கப்படுவது இரட்டை நிலைப்பாடு என அவர் விமர்சித்தார்.

மிதக்கும் மக்கள் தொகை மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பழைய தரவுகளின் அடிப்படையில் தமிழக நகரங்களின் வளர்ச்சியை தடுக்கக் கூடாது என்றும், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P