Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 26 ஜூலை (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளுமே ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அலைமோதி வருகிறது.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
குறிப்பாக, விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து அருவிகளில் ஆனந்த குளியல் போட்டு வரும் நிலையில், விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றாலமானது சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைக்கட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN