Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜூலை (ஹி.ச)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 அன்று கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.
1999-ஆம் ஆண்டு லடாக்கின் கார்கில் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்து, இந்திய ராணுவம் தனது எல்லைப் பகுதிகளை மீட்டெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை இந்த நாள் குறிக்கிறது.
இந்தா நாளில் இந்தியாவின் அரசியல் பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கார்கில் போர் வெற்றி நாளில் திமுக தலைவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
கார்கில் வெற்றி நாளில், பெரும் சவால்களுக்கு மத்தியிலும் அசாத்தியமான வீரத்தையும் மன உறுதியையும் வெளிப்படுத்திய இந்திய வீரர்களுக்கு எங்கள் மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம்.
இந்தியாவிற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களை நாங்கள் போற்றுகிறோம்; மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b