இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த நபர் கைது - சிறையில் அடைப்பு
சிவகங்கை, 26 ஜூலை (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் நிற்கும் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மட்டும் குறிவைத்து செல்போனில் ஆபாசமாக வீடியோ படம்
Prison


சிவகங்கை, 26 ஜூலை (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் நிற்கும் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மட்டும் குறிவைத்து செல்போனில் ஆபாசமாக வீடியோ படம் பிடித்து ரசித்து வந்த நபர் பள்ளத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் இளம்பெண் ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுத்ததை உணர்ந்த பின் பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினரும் அவனைப் பிடித்துக் கொடுத்தார் .

இதனை தொடர்ந்து அந்தப் பெண் கொடுத்த புகாரி பேரில் பள்ளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்த 45 வயதான செந்தில்குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

செல்போன்களை ஆய்வு செய்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோபடம் பிடித்து அதை ரசித்து வந்தது தெரிய வந்தது. உடனடியாக அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் செல்போனில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ படங்களை போலீசார் அழித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN