கார்கில் விஜய் திவாஸ் - வீரத் தியாகிகளுக்கு நயினார் நாகேந்திரன் மரியாதை
தமிழ்நாடு, 26 ஜூலை (ஹி.ச.) கார்கில் விஜய் திவாஸ் நாளையொட்டி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த அனைத்து வீரத் தியாகிகளுக்கும் மரியாதை செலுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், 1999-ஆம்
நயினார் நாகேந்திரன்


தமிழ்நாடு, 26 ஜூலை (ஹி.ச.)

கார்கில் விஜய் திவாஸ் நாளையொட்டி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த அனைத்து வீரத் தியாகிகளுக்கும் மரியாதை செலுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில்,

1999-ஆம் ஆண்டு கார்கில் போரின்போது அணுக முடியாத மலைச் சிகரங்களில் இணையற்ற துணிச்சல், ஒப்பற்ற வீரம் மற்றும் அசைக்க முடியாத மன உறுதியுடன் போராடி, நாட்டின் இறையாண்மையையும் பெருமையையும் இந்திய வீரர்கள் காத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் தியாகம் இந்திய வரலாற்றில் என்றும் பொற்குறியீடாக நிலைத்திருக்கும் என்றும், அவர்களின் வீரச் செயல்களுக்கும் அளப்பரிய தியாகத்திற்கும் நாடு என்றும் நன்றிக்கடன்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய இராணுவத்தின் வீரமும், தன்னலமற்ற சேவையும், தாய்நாட்டிற்காக எதையும் அர்ப்பணிக்கும் உயர்ந்த பண்பும், வருங்கால தலைமுறைகளுக்கு தேசப்பற்று, கடமை உணர்வு மற்றும் தியாக மனப்பான்மையை விதைக்கும் உந்துசக்தியாக என்றும் விளங்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார். இறுதியாக, ஜெய் ஹிந்த்! என தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam