பிறந்து 16 நாட்களே ஆன பெண் குழந்தையை மருத்துவமனையில் விட்டுச் சென்ற தாய் போலீசார் விசாரணை
திருவனந்தபுரம் , 26 ஜூலை (ஹி.ச.) கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா பகுதியை சேர்ந்தவர் ஷாகினா (வயது 28). இவர் கடந்த 16 நாட்களுக்கு முன்பு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவத்துக்கு பின்
A


திருவனந்தபுரம் , 26 ஜூலை (ஹி.ச.)

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா பகுதியை சேர்ந்தவர் ஷாகினா

(வயது 28).

இவர் கடந்த 16 நாட்களுக்கு முன்பு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

பிரசவத்துக்கு பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷாகினா, அங்கு இருந்த மற்றொரு பெண்ணிடம் தனது குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு, கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுகுறித்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு, கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தாய்-சேய் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு குழந்தைக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனையில் குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் குழந்தையின் தாய் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டிருந்த ஷாகினாவின் செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயன்றபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

குழந்தையை விட்டுச் சென்றதற்கான காரணம் என்ன? ஷாகினா எங்கு சென்றார்? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA