கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் முறைகேட்டில் 8 பேர் பணியிடை நீக்கம் – அமைச்சர் ரமேஷ் அதிரடி நடவடிக்கை
சென்னை, 26 ஜூலை (ஹி.ச.) கோவை பெரியகடை வீதியில் உள்ள அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக, கோயில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 8 பேரை பணியிடை நீக்கம் செய்து
Ramesh


சென்னை, 26 ஜூலை (ஹி.ச.)

கோவை பெரியகடை வீதியில் உள்ள அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக, கோயில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 8 பேரை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 15.07.2026 அன்று நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின்போது, ஒரு உண்டியலை திட்டமிட்டு திருடியதாக 4 கோயில் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தை தடுக்கத் தவறியதோடு, முறைகேட்டை கண்டறியாமல் இருந்ததாக 2 சரக ஆய்வாளர்கள், 1 செயல் அலுவலர் மற்றும் 1 உதவி ஆணையர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள்:

திருட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்குள்ளான ஊழியர்கள்:

பாலசுப்ரமணியன் – சீட்டு விற்பனையாளர்

சரவணன் – அலுவலக உதவியாளர்

பிரதீப்குமார் – திருவலகு பணியாளர்

கிருஷ்ணராஜ் – பூசாரி

நடவடிக்கை எடுக்கப்பட்ட அதிகாரிகள்:

ராம்குமார் – சரக ஆய்வாளர்

உதயகுமார் – சரக ஆய்வாளர்

குமார் – செயல் அலுவலர்

உஷா நந்தினி – உதவி ஆணையர்

இந்த 8 பேரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ