Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 26 ஜூலை (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்ட பகுதிகளான நாடுகாணி, கூடலூர் ,ஊசி மலை, ஓவேலி பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் அதிக அளவில் பூத்துள்ளது.
இதனால் குறிஞ்சி மலர்களை கான பொது மக்கள் சுற்றுலா பயணிகள் குறிஞ்சி பூத்துள்ள வன பகுதிக்கு அதிகளவில் செல்கின்றனர். குறிஞ்சி மலர்கள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய தாவரங்களில் ஒன்றாக உள்ளது.
எனவே பூக்களை பறிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் மேலும் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள பகுதிகளில் அதிக அளவில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறிஞ்சி மலர்களை பார்க்கச் செல்லக்கூடாது என வனத்துறை தடை விதித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக நீலக்குறிஞ்சி மலர்களின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீலக்குறிஞ்சியை காண அதிகளவில் வந்து செல்கின்றனர்.
பாதுகாக்கப்பட்ட மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் நீலக்குறிஞ்சிகள் பூத்துள்ளதால் அந்தப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN