கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா - ஆகஸ்ட் 5-ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
சேலம், 26 ஜூலை (ஹி.ச.) சேலம் மாநகரில் உள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 5 (புதன்கிழமை) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத் வெளியிட்டுள்ள அறி
சேலம்


சேலம், 26 ஜூலை (ஹி.ச.)

சேலம் மாநகரில் உள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 5 (புதன்கிழமை) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிற்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அரசின் அவசர பணிகள் பாதிக்கப்படாத வகையில், மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் தேவையான பணியாளர்களுடன் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, ஆகஸ்ட் 8 (சனிக்கிழமை) அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam