Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜூலை (ஹி.ச.)
தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, தென் மண்டல கவுன்சிலில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தென் மண்டல கவுன்சிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில், அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு அவ்வப்போது கூட்டும் தென் மண்டல கவுன்சில் கூட்டங்களில், தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்பார்கள்.
இந்தக் கூட்டங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு, உள்நாட்டு பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள், சிறுபான்மையினர் நலன், மாநில எல்லைப் பாதுகாப்பு, நதிநீர் பகிர்வு உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கம்.
இதற்கிடையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையின் மூலம், தென் மண்டல கவுன்சிலில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ