டாஸ்மாக் மதுபான கூடங்களுக்கு புதிய அரசாணை வெளியீடு
சென்னை, 26 ஜூலை (ஹி.ச) டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஒட்டி செயல்படும் மதுபான கூடங்கள் (பார்) தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை நடைமுறையில் இருந்த சில விதிமுறைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, ட
Tasmac Protest


Tt


சென்னை, 26 ஜூலை (ஹி.ச)

டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஒட்டி செயல்படும் மதுபான கூடங்கள் (பார்) தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை நடைமுறையில் இருந்த சில விதிமுறைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை, டாஸ்மாக் மதுபானக் கடையை ஒட்டி மது கூடம் நடத்துவதற்கான ஆன்லைன் டெண்டரில் பங்கேற்க, அந்த இடத்தின் உரிமையாளரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (No Objection Certificate - NOC) பெறுவது கட்டாயமாக இருந்தது.

இந்த விதிமுறையால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே மது கூடங்களை நடத்தும் வாய்ப்பு கிடைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையை மாற்றும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையின்படி,

இனி டாஸ்மாக் மதுபானக் கடையிலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் மதுபான கூடம் அமைக்க அனுமதி வழங்கப்படும்.

மேலும், மது கூடம் அமைப்பதற்கான குறைந்தபட்ச பரப்பளவு 15 சதுர மீட்டரிலிருந்து 20 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 205 சதுர அடி பரப்பளவு கொண்ட இடம் கட்டாயமாக இருக்க வேண்டும்.

புதிய விதிகளின் அடிப்படையில், குறிப்பிட்ட இடத்தில் மதுபான கூடம் அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பான இறுதி முடிவை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் எடுப்பார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை மூலம் டெண்டர் செயல்முறையில் போட்டித்தன்மை அதிகரிப்பதுடன், மதுபான கூடங்கள் அமைப்பதற்கான விதிமுறைகளும் மாற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ