திருவண்ணாமலையில் ட்ரோன், மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை - பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்கள், ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்
திருவண்ணாமலை, 26 ஜூலை (ஹி.ச.) திருவண்ணாமலையில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக, 50-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கல்நகர், க
மது


திருவண்ணாமலை, 26 ஜூலை (ஹி.ச.)

திருவண்ணாமலையில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக, 50-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கல்நகர், கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையில், மோப்பநாய் 'பைரவா' மற்றும் ட்ரோன் கேமரா பயன்படுத்தப்பட்டன. போலீசார் பல குழுக்களாகப் பிரிந்து தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கல்நகர் பகுதியில் கடப்பா கற்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு பெண்ணை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பாக அவை யாருக்குச் சொந்தமானவை, பின்னணியில் செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam