Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 26 ஜூலை (ஹி.ச.)
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டு பெருவிழா இன்று (ஜூலை 26) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவின் தொடக்கமாக நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் தலைமையில் சிறப்புத் திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து தினமும் காலை, மாலை திருப்பலிகள், நவநாள் வழிபாடுகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஆகஸ்ட் 2-ஆம் தேதி திருப்பலி ஊர்வலமும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி பனிமய மாதா திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam