ஞாயிற்றுக்கிழமையான இன்று உறையூர் மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க குவிந்த மீன் பிரியர்கள்
திருச்சி, 26 ஜூலை (ஹி.ச.) திருச்சி உறையூர் காசிவிளங்கி மொத்த மற்றும் சில்லறை மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை முதலே மீன் வாங்க பொதுமக்கள் திரளாக குவிந்தனர். திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் குடும்
Fish Market


திருச்சி, 26 ஜூலை (ஹி.ச.)

திருச்சி உறையூர் காசிவிளங்கி மொத்த மற்றும் சில்லறை மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை முதலே மீன் வாங்க பொதுமக்கள் திரளாக குவிந்தனர்.

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து தங்களுக்கு தேவையான மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது சில வகை மீன்களின் விலை ஓரளவு குறைந்ததால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

கூட்டம் அதிகரித்ததால் பல இடங்களில் பொதுமக்கள் முண்டியடித்தபடி மீன்களை வாங்கிச் சென்றனர்.

விலை நிலவரப்படி, வஞ்சிரம் மீன் கடந்த வாரம் போலவே கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது.

கிளி மீன் கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சங்கரா மீன் கடந்த வாரம் ரூ.450-க்கு விற்ற நிலையில், இந்த வாரம் ரூ.400-ஆக குறைந்தது. அதே நேரத்தில், பாறை மீன் கடந்த வாரம் ரூ.500-க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் கிலோ ரூ.600-ஆக உயர்ந்தது.

வார விடுமுறையை முன்னிட்டு மீன் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் வருகை தந்ததால் உறையூர் மீன் மார்க்கெட் காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது.

விலை ஓரளவு குறைந்திருப்பதும், மீன்களின் வரத்து திருப்திகரமாக இருந்ததும் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN