முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு
போர்ட் ஆப் ஸ்பெயின், 26 ஜூலை (ஹி.ச.) பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று டிரினிடாட் & டொபாகோவின் போர்ட் ஆப் ஸ்
A


போர்ட் ஆப் ஸ்பெயின், 26 ஜூலை (ஹி.ச.)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று டிரினிடாட் & டொபாகோவின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

போட்டிக்கு முன்பு நடைபெற்ற டாஸ் சுண்டலில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரண்டன் கிங் மற்றும் டஜெனெரைன் சந்தர்பால் களமிறங்கி இன்னிங்சை தொடங்கினர்.

2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கில் இரு அணிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA