Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 26 ஜூலை (ஹி.ச)
சிவகங்கை இளையான்குடி சாலையில் முலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரஜினி (40) என்ற நபர் இன்று அதிகாலை மர்ம நபர்களால் கழுத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட ரஜினிக்கு யாருடனாவது தகராறு இருந்ததா, அவரை கொலை செய்யும் அளவிற்கு பகை இருந்ததா என்பது குறித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வரும் போலீசார், தலைமறைவாக உள்ள மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b