ஈரோட்டில் முன்னாள் அதிமுக எம்எல்ஏவை கலாய்த்த அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு, 26 ஜூலை (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வருவா
செங்கோ


ஈரோடு, 26 ஜூலை (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி கலந்து கொண்டனர்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் மொடக்குறிச்சி மற்றும் ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சர் செங்கோட்டையனை, முன்னாள் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

அப்போது, தென்னரசு அதிமுக கரை வேட்டி அணிந்திருந்ததை கவனித்த அமைச்சர் செங்கோட்டையன், நகைச்சுவையாக,

இந்த முறை உனக்கு சீட்டு கொடுக்கல... எதுக்கு வேட்டி? என்று கூறி கலாய்த்தார்.

அமைச்சரின் இந்த நகைச்சுவை பேச்சைக் கேட்ட முன்னாள் எம்எல்ஏ தென்னரசு மற்றும் அங்கிருந்த நிர்வாகிகள் சிரித்தபடியே நிகழ்ச்சி அரங்கிற்குள் சென்றனர்.

இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P