மக்கள் வெளியேற்றத்தைக் கண்டித்து தேனி மலை கிராம மக்கள் கடையடைப்பு போராட்டம்
தேனி, 26 ஜூலை (ஹி.ச.) தேனி மாவட்டம் கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியத்தில் 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பல தலைமுறைகளாக வசிக்கின்றனர். சமீபத்தில் மத்திய அரசு இப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் - ம
மக்கள் வெளியேற்றத்தைக் கண்டித்து தேனி மலை கிராம மக்கள் கடையடைப்பு போராட்டம்


தேனி, 26 ஜூலை (ஹி.ச.)

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியத்தில் 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பல தலைமுறைகளாக வசிக்கின்றனர்.

சமீபத்தில் மத்திய அரசு இப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் உள்ள மலைக்கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.

மலைக்கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் இரு மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, 3 தலைமுறைகளாக வசித்து வரும் மலை கிராம மக்களை அவர்களின் கிராமங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனை கண்டித்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் அங்கு ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

அரசு ஆவணங்களுடன் பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், தமிழக அரசு உச்ச நீதிமன்ற சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடையடைப்பு போராட்டம் காரணமாக வருசநாடு சுற்றுவட்டார கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Hindusthan Samachar / vidya.b