51-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்கம் -  அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்பு
சென்னை, 27 ஜூலை (ஹி.ச) தமிழ்நாடு துப்பாக்கிச்சுடுதல் சங்கம் சார்பில் நடத்தப்படும் 51-வது மாநில துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கியது. போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் ஆத
Aadhav


சென்னை, 27 ஜூலை (ஹி.ச)

தமிழ்நாடு துப்பாக்கிச்சுடுதல் சங்கம் சார்பில் நடத்தப்படும் 51-வது மாநில துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கியது.

போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இலக்கை குறிவைத்து சுட்டு தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியின்போது, துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டின் அடிப்படை நடைமுறைகள் மற்றும் தேவையான கட்டமைப்பு வசதிகள் குறித்து பயிற்சியாளர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும், இந்த விளையாட்டை தானும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள், 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் ஸ்போர்ட் பிஸ்டல், 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் மற்றும் ஷாட்கன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டிகள், சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் (ISSF) விதிமுறைகளின்படி நடத்தப்படுகின்றன.

இந்த போட்டியில் காவல்துறையினர், தேசிய மாணவர் படையினர் (NCC), துப்பாக்கிச்சுடுதல் வீரர்-வீராங்கனைகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ