Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர், விஞ்ஞானி மற்றும் பாரத ரத்னா விருது பெற்ற டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில்,
மக்களின் மனதில் என்றும் அழியாத இடத்தைப் பெற்ற முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கனவு காணுங்கள்; அந்தக் கனவை நனவாக்க உழையுங்கள் என்ற கலாமின் வார்த்தைகள் இன்றளவும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், ஊக்கமாகவும் திகழ்கின்றன என்றும், அறிவு, எளிமை, நேர்மை மற்றும் தேசப்பற்று ஆகியவற்றின் ஒளிவிளக்காக அவர் என்றும் வாழ்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
டாக்டர் அப்துல் கலாமின் உயரிய சிந்தனைகள், தன்னலமற்ற சேவை மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்காக அவர் கண்ட கனவு தலைமுறைகள் தழுவி நாட்டை வழிநடத்தட்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P