திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ.3.78 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி , 27 ஜூலை (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 84 ஆயிரத்து 488 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களில் 37 ஆயிரத்து 61 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்றைய தினம் கோவி
A


திருப்பதி , 27 ஜூலை (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 84 ஆயிரத்து 488 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அவர்களில் 37 ஆயிரத்து 61 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்றைய தினம் கோவில் உண்டியலில் ரூ.3 கோடியே 78 லட்சம் காணிக்கையாக வசூலானதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பின. இதன் காரணமாக காத்திருப்பு வரிசை சிலாத்தோரணம் வரை நீண்டது. முன்பதிவு செய்யப்பட்ட 'டைம் ஸ்லாட்' டோக்கன் இல்லாமல் வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சுமார் 20 முதல் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும், அன்று 4 லட்சத்து 28 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 74 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர்.

அதேபோல், 3 ஆயிரத்து 789 பேருக்கு மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA