Enter your Email Address to subscribe to our newsletters

விஜயவாடா , 27 ஜூலை (ஹி.ச.)
ஆந்திர மாநில மனிதவள மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், கிருஷ்ணா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பெனமலூர் சட்டமன்ற தொகுதிக்கு வந்த அவருக்கு தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பெனமலூர் தொகுதி எம்.எல்.ஏ. போடே பிரசாத் தலைமையில், கங்கிபாடு மண்டலம் ஈடுபுகல்லு கிராஸ் ரோடு பகுதியில் அமைச்சர் லோகேஷுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் அமைச்சர்கள் கொல்லு ரவீந்திரா, வாசம்ஷெட்டி சுபாஷ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் காகித கிருஷ்ண பிரசாத், வர்ல குமார் ராஜா, யார்லகட்ட வெங்கட்ராவ், வெனிகண்ட்ல ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ஈடுபுகல்லு கிராஸ் ரோடு முதல் புனாதிபாடு வரை பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தெலுங்கு தேசம் கட்சி கொடிகளை ஏந்தியபடி தொண்டர்கள் உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.
பேரணியில் பங்கேற்ற அமைச்சர் லோகேஷ், வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு கைகாட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து புனாதிபாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெண்கள் ஜூனியர் கல்லூரி கட்டிடத்தை அமைச்சர் லோகேஷ் திறந்து வைக்க உள்ளார்.
பின்னர் கங்கிபாட்டில் உள்ள அயானா கன்வென்ஷன் மையத்தில் நடைபெறும் பெனமலூர் தொகுதி தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA