Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 27 ஜூலை (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு கிராமம், செய்யாறு கூட்ரோடு சாலையில் பாபு என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் அவரது கடைக்கு வந்த மூன்று இளைஞர்கள் தின்பண்டங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
பின்னர் அதற்கான பணத்தை தருமாறு கடை உரிமையாளர் கேட்டதாக கூறப்படுகிறது.
அந்த மூன்று இளைஞர்கள் பணம் தர மறுத்தது மட்டும் இல்லாமல் கடை உரிமையாளர் பாபுவை தகாத வார்த்தைகள் பேசி தாக்குதல் நடத்தி கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி சூறையாடிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பாபு அளித்த புகாரின் பேரில் ஆரணி நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த இந்துகுமார் (33), சுதாகர் (26) ஆகிய இருவரை கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆரணி அருகே பேக்கரி கடையில் உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN