மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 11-வது நாளாக தடை நீட்டிப்பு - வனத்துறை அறிவிப்பு
தேனி, 27 ஜூலை (ஹி.ச.) தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக இன்றும் தொடர்வதாக வனத்துறை அறிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்
மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 11-வது நாளாக தடை நீட்டிப்பு -  வனத்துறை அறிவிப்பு


தேனி, 27 ஜூலை (ஹி.ச.)

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக இன்றும் தொடர்வதாக வனத்துறை அறிவித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மேகமலை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் அருவிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் காரணமாக பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேகமலை அருவிக்கு செல்லும் பாதைகள் மற்றும் அருவி சுற்றுவட்டார பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள் நிறைவடைந்த பின்னர், வனத்துறையின் மறு அறிவிப்பு வெளியானதும் சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேகமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், அருவிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்

Hindusthan Samachar / vidya.b